குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
கள்ளாமை.
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
கள்ளாமை.
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
Translation:
Practice
of fraud’s dark cunning arts they shun,
of fraud’s dark cunning arts they shun,
Who
long for power by ‘measured wisdom’ won.
long for power by ‘measured wisdom’ won.
Explanation:
That
black-knowledge which is called fraud, is not in those who desire that
greatness which is called rectitude.
black-knowledge which is called fraud, is not in those who desire that
greatness which is called rectitude.
கலைஞர் உரை:
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.
[ads-post]
மு.வ உரை:
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.
மணக்குடவர் உரை:
களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை. இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.
பரிமேலழகர் உரை:
களவு என்னும் கார் அறிவு ஆண்மை – களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் – உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் – மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் ‘களவென்னும் கார் அறிவு ஆண்மை‘ என்றும், காரணத்தைக் காரியமாக்கி ‘அளவு என்னும் ஆற்றல்‘ என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).




