HomeUncategorizedThirukural 293 of 1330 - திருக்குறள் 293 of 1330

Thirukural 293 of 1330 – திருக்குறள் 293 of 1330

Thirukural
293 of 1330 –
திருக்குறள் 293 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
வாய்மை.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
Translation:
Speak
not a word which false thy own heart knows
Self-kindled
fire within the false one’s spirit glows.
Explanation:
Let
not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will
burn him (with the memory of his guilt).
கலைஞர் உரை:
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

[ads-post]

மு. உரை:
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.
மணக்குடவர் உரை:
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.
பரிமேலழகர் உரை:
தன் நெஞ்சு அறிவது பொய்யற்கஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல்கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார்தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள்நெஞ்சு அறிந்த கொடியவை
மறைப்பவும் மறையாவாம்நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்” (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments