HomeUncategorizedThirukural 297 of 1330 - திருக்குறள் 297 of 1330

Thirukural 297 of 1330 – திருக்குறள் 297 of 1330

Thirukural
297 of 1330 –
திருக்குறள் 297 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
வாய்மை.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
Translation:
If
all your life be utter truth, the truth alone,
‘Tis
well, though other virtuous acts be left undone.
Explanation:
If
a man has the power to abstain from falsehood, it will be well with him, even
though he practise no other virtue.
கலைஞர் உரை:
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

[ads-post]

மு. உரை:
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.
மணக்குடவர் உரை:
பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின் பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.
பரிமேலழகர் உரை:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின்ஒருவன் பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய வல்லவனாயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்றுஅவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று (அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணிவின் மேற்று. ‘பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்றுஎன்பார், ‘செய்யாமை செய்யாமை நன்றுஎன்றார்.இதனை இவ்வாறு அன்றிப்பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று‘,எனப் பொழிப்பாக்கி, ‘பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாதுஎன்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments