HomeUncategorizedThirukural 303 of 1330 - திருக்குறள் 303 of 1330

Thirukural 303 of 1330 – திருக்குறள் 303 of 1330

Thirukural
303 of 1330 –
திருக்குறள் 303 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
வெகுளாமை.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
Translation:
If any rouse thy wrath, the trespass
straight forget;
For wrath an endless train of evils will
beget.
Explanation:
Forget anger towards every one, as
fountains of evil spring from it.
கலைஞர் உரை:
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

[ads-post]
மு. உரை:
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
மணக்குடவர் உரை:
வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
யார் மாட்டும் வெகுளியை மறத்தல்யாவர்மாட்டும் வெகுளியைஒழிக‘, தீய பிறத்தல்அதனான் வரும்‘ – ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின்யார்மாட்டும்என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின்தீய பிறத்தல் அதனான் வரும்‘, என்றும் கூறினார்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments