HomeUncategorizedThirukural 385 of 1330 - திருக்குறள் 385 of 1330

Thirukural 385 of 1330 – திருக்குறள் 385 of 1330

Thirukural
385 of 1330 –
திருக்குறள் 385 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
Translation:
A
king is he who treasure gains, stores up, defends,
And
duly for his kingdom’s weal expends.
Explanation:
He
is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to
distribute it.
கலைஞர் உரை:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

 [ads-post]

மு. உரை:
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த
பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.
மணக்குடவர் உரை:
பொருள் வரும்வழி யியற்றலும் அதனை
அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப்
பகுத்தலும் வல்லவன் அரசனாவான். பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து
அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.
பரிமேலழகர் உரை:
இயற்றலும் – தனக்குப் பொருள்கள்
வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும்
, ஈட்டலும் – அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும் –
தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும்
, காத்த வகுத்தலும் – காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின்
பொருட்டு விடுத்தலும்
, வல்லது
அரசு – வல்லவனே அரசன் . (ஈட்டல்
, காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல்என்பதற்குச் செயப்படுபொருள்
வருவிக்கப்பட்டது. பொருள்களாவன:மணி
, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு
தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர்
, கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோர் என்று
இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்
, யானை, குதிரை, நாடு, அரண் என்று
இவற்றிற்கும்
, பகையொடு
கூடலின் பிரிக்கப்படுவார்க்கும்
, தன்னில்பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட்
பொருட்டாகவும்
, மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய
செய்தற்கும்
, ஐம்புலன்களான்
நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலைஇன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலியதவறாமல்
செய்தல் அரிதாகலின்
, ‘வல்லதுஎன்றார். இவை
நான்கு பாட்டானும் மாட்சியேகூறப்பட்டது.) 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments