HomeUncategorizedThirukural 397 of 1330 - திருக்குறள் 397 of 1330

Thirukural 397 of 1330 – திருக்குறள் 397 of 1330

Thirukural
397 of 1330 –
திருக்குறள் 397 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்வி.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
Translation:
The
learned make each land their own, in every city find a home;
Who,
till they die; learn nought, along what weary ways they roam!.
Explanation:
How
is it that any one can remain without learning, even to his death, when (to the
learned man) every country is his own (country), and every town his own (town)?.
கலைஞர் உரை:
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?.

 [ads-post]

மு. உரை:
கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
சாலமன் பாப்பையா உரை:
கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?.
மணக்குடவர் உரை:
யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது
நாடும் ஊரும் போலாம். ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி
? இது கல்வி
எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது
பரிமேலழகர் உரை:
யாதானும் நாடுஆம் ஊர்ஆம் –
கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி
, யாதானும் ஒரு நாடும் நாடாம், யாதானும் ஓர்
ஊரும் ஊர் ஆம்
; ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு என் – இங்ஙனமாயின்
, ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என்
கருதி
? (உயிரோடு
சேறலின்
, ‘சாம்துணையும்என்றார். பிறர்
நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு
ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை
, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments