HomeUncategorizedThirukural 409 of 1330 - திருக்குறள் 409 of 1330

Thirukural 409 of 1330 – திருக்குறள் 409 of 1330

Thirukural
409 of 1330 –
திருக்குறள் 409 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
Translation:
Lower
are men unlearned, though noble be their race,
Than
low-born men adorned with learning’s grace.
Explanation:
The
unlearned, though born in a high caste, are not equal in dignity to the
learned; though they may have been born in a low caste.
கலைஞர் உரை:
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

[ads-post]

மு. உரை:
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
மணக்குடவர் உரை:
கல்வியில்லாதார் உயர்குலத்திற்
பிறந்தாராயினும்
, இழிகுலத்துப்
பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
பரிமேலழகர் உரை:
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் –
கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும்
, கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் –
தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.
(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும்
, உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து
என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments