HomeUncategorizedThirukural 422 of 1330 - திருக்குறள் 422 of 1330

Thirukural 422 of 1330 – திருக்குறள் 422 of 1330

Thirukural
422 of 1330 –
திருக்குறள் 422 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : அறிவுடைமை.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
Translation:
Wisdom
restrains, nor suffers mind to wander where it would;
From
every evil calls it back, and guides in way of good.
Explanation:
Not
to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it
in good, this is wisdom.
கலைஞர் உரை:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
மு. உரை:
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

[ads-post]

சாலமன் பாப்பையா உரை:
மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
மணக்குடவர் உரை:
உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ்
செல்லவிடாது
, தீமையை
நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது. இது காம நுகர்ச்சியின்கண் பழியும்
பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.
பரிமேலழகர் உரை:
சென்ற இடத்தால் செலவிடாது – மனத்தை
அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது
, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு – அப்புலத்தின்
நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு. (வினைக்கு
ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை
, ஊறு, ஒளி,
சுவை, நாற்றம்
எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின்
, ‘இடத்தால்என்றார். விடாதுஎன்பது
கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி
மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார்
, அஃது உயிர்க்குணம் ஆகலான்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments