HomeUncategorizedThirukural 474 of 1330 - திருக்குறள் 474 of 1330

Thirukural 474 of 1330 – திருக்குறள் 474 of 1330

Thirukural
474 of 1330 –
திருக்குறள் 474 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : வலியறிதல்.
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
Translation:
Who not agrees with those around, no
moderation knows,
In self-applause indulging, swift to ruin
goes.
Explanation:
He will quickly perish who, ignorant of his
own resources flatters himself of his greatness, and does not live in peace
with his neighbours.
கலைஞர் உரை:
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

[ads-post]
மு. உரை:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.
மணக்குடவர் உரை:
அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன். இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.
பரிமேலழகர் உரை:
ஆங்கு அமைந்து ஒழுகான்அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது, அளவு அறியான்தன் வலியளவு அறிவதும் செய்யாது, தன்னை வியந்தான்தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன், விரைந்து கெடும்விரையக் கெடும். (காரியத்தைக் காரணமாக உபசரித்து, ‘வியந்தான்என்றார். ‘விரையஎன்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றேஅயல் வேந்தரோடு செயற்பாலது, இவையன்றித்தான் மெலியனாய்வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், ‘விரைந்துகெடும்என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலிஅறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments