HomeUncategorizedThirukural 478 of 1330 - திருக்குறள் 478 of 1330

Thirukural 478 of 1330 – திருக்குறள் 478 of 1330

Thirukural
478 of 1330 –
திருக்குறள் 478 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : வலியறிதல்.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
Translation:
Incomings may be scant; but yet, no failure
there,
If in expenditure you rightly learn to
spare.
Explanation:
Even though the income (of a king) be
small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his
income.
கலைஞர் உரை:
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

[ads-post]
மு. உரை:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு)
விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
மணக்குடவர் உரை:
பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின். இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லைஅரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடைபோகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின். (‘இட்டிதுஎனவும்அகலாதுஎனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. ‘பொருள்என்பது அதிகாரத்தான் வருவித்து, ‘அளவுஎன்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments