HomeUncategorizedThirukural 494 of 1330 - திருக்குறள் 494 of 1330

Thirukural 494 of 1330 – திருக்குறள் 494 of 1330

Thirukural
494 of 1330 –
திருக்குறள் 494 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இடனறிதல்.
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
Translation:
The foes who thought to triumph, find their
thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and
thence the fight maintain.
Explanation:
If they who draw near (to fight) choose a
suitable place to approach (their enemy), the latter, will have to relinquish
the thought which they once entertained, of conquering them.
கலைஞர் உரை:
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

[ads-post]
மு. உரை:
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
சாலமன் பாப்பையா உரை:
ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.
மணக்குடவர் உரை:
தம்மைக் கெடுத்தற் கெண்ணினவர் தங்களெண்ணம் இழப்பர்; வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின். இஃது இடமறிந்து செய்வோர் அமைதியும் வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
இடன் அறிந்து துன்னியார்தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர், துன்னிச் செயின்அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வாராயின், எண்ணியார் எண்ணம் இழப்பர்அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர். (‘அரண்என்பது அவாய் நிலையான் வந்தது. ‘எண்ணஎன்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. ‘அதனை இழப்பர்என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனான், அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments