HomeUncategorizedThirukural 546 of 1330 - திருக்குறள் 546 of 1330

Thirukural 546 of 1330 – திருக்குறள் 546 of 1330

Thirukural
546 of 1330 –
திருக்குறள் 546 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : செங்கோன்மை.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
Translation:
Not
lance gives kings the victory,
But
sceptre swayed with equity.
Explanation:
It
is not the javelin that gives victory, but the king’s sceptre, if it do no
injustice.
கலைஞர் உரை:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

[ads-post]

மு. உரை:
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
மணக்குடவர் உரை:
அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின். இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:
மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல்மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின்அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின். (கோல் செவ்விதாயவழியேவேல் வாய்ப்பது என்பார், ‘வேல் அன்றுஎன்றார். ‘மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்‘ (புறநா.55) என்றார் பிறரும். ‘கோடான்என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments