குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கண்ணோட்டம்.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
Translation:
To
smile on those that vex, with kindly face,
smile on those that vex, with kindly face,
Enduring
long, is most excelling grace.
long, is most excelling grace.
Explanation:
Patiently
to bear with, and show kindness to those who grieve us, is the most excellent
of all dispositions.
to bear with, and show kindness to those who grieve us, is the most excellent
of all dispositions.
கலைஞர் உரை:
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.
[ads-post]
மு.வ உரை:
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.
மணக்குடவர் உரை:
தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும் கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்.
பரிமேலழகர் உரை:
ஒறுத் தாற்றும் பண்பினார் கண்ணும் – தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை – கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது. (‘பண்பினார்‘ என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம் ‘ஒறுத்தாற்றும்‘, ‘பொறுத்தாற்றும்‘ என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)




