HomeUncategorizedThirukural 594 of 1330 - திருக்குறள் 594 of 1330

Thirukural 594 of 1330 – திருக்குறள் 594 of 1330

Thirukural
594 of 1330 –
திருக்குறள் 594 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : ஊக்கமுடைமை.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
Translation:
The
man of energy of soul inflexible,
Good
fortune seeks him out and comes a friend to dwell.
Explanation:
Wealth
will find its own way to the man of unfailing energy.
கலைஞர் உரை:
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

[ads-post]
மு. உரை:
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.
மணக்குடவர் உரை:
அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும். நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோஎன்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:
அசைவு இலா ஊக்கம் உடையான் உழைஅசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும். (அசைவு இன்மைஇடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், ‘அதர்வினாய்ச் செல்லும்என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments