HomeUncategorizedThirukural 595 of 1330 - திருக்குறள் 595 of 1330

Thirukural 595 of 1330 – திருக்குறள் 595 of 1330

Thirukural
595 of 1330 –
திருக்குறள் 595 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : ஊக்கமுடைமை.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
Translation:
With
rising flood the rising lotus flower its stem unwinds;
The
dignity of men is measured by their minds.
Explanation:
The
stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s
greatness proportionate to their minds.
கலைஞர் உரை:
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

[ads-post]
மு. உரை:
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
சாலமன் பாப்பையா உரை:
நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.
மணக்குடவர் உரை:
புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி; அதுபோல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம். இஃது ஊக்கம் இதனானே உண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:
வெள்ளத்து அனைய மலர் நீட்டம்நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வுஅது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி. (‘மலர்ஆகுபெயர். நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபடவெள்ளத்து அனையஎன்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல்பொருள் படைகளான் மிகுதல்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments