Thirukural
66 of 1330 – திருக்குறள் 66 of 1330
66 of 1330 – திருக்குறள் 66 of 1330
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
புதல்வரைப் பெறுதல்.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
புதல்வரைப் பெறுதல்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
Translation:
‘The pipe is sweet,’ ‘the lute is sweet,’
by them’t will be averred,
by them’t will be averred,
Who music of their infants’ lisping lips
have never heard.
have never heard.
Explanation:
“The pipe is sweet, the lute is
sweet,” say those who have not heard the prattle of their own children.
sweet,” say those who have not heard the prattle of their own children.
கலைஞர் உரை:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
[ads-post]
மு.வ உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
மணக்குடவர் உரை:
குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.
பரிமேலழகர் உரை:
குழல் இனிது யாழ் இனிது என்ப – குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் – தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். (‘குழல்‘, ‘யாழ்‘ என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.).




