HomeUncategorizedThirukural 687 of 1330 - திருக்குறள் 687 of 1330

Thirukural 687 of 1330 – திருக்குறள் 687 of 1330

Thirukural
687 of 1330 –
திருக்குறள் 687 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
Translation:
He is the best who knows what’s due, the
time considered well,
The place selects, then ponders long ere he
his errand tell.
Explanation:
He is chief (among ambassadors) who
understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion,
knows the (most suitable) place, and delivers his message after (due)
consideration.
கலைஞர் உரை:
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.

[ads-post]
மு. உரை:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.
மணக்குடவர் உரை:
காரியம் நின்ற முறைமையை யறிந்து
காலத்தையும் நினைத்து இடமும் அறிந்து தானேயெண்ணிச் சொல்லவல்லவன் தலையான தூதனாவான்
. இது தலையான தூதரிலக்கணம்
கூறிற்று
.
பரிமேலழகர் உரை:
கடன் அறிந்துவேற்றரசரிடத்துத்
தான் செய்யும் முறைமை யறிந்து
; காலம் கருதிஅவர் செவ்வி பார்த்து; இடன் அறிந்துசென்ற கருமஞ்
சொல்லுதற்கு ஏற்ற இடம் அறிந்து
; எண்ணிசொல்லுமாற்றை முன்னே விசாரித்து; உரைப்பான் தலைஅவ்வாறு
சொல்லுவான் தூதரின் மிக்கான்
. (செய்யும் முறையாவது: அவர் நிலையும் தன் அரசன் நிலையும் தன் நிலையும்
தூக்கி
, அவற்றிற்கு
ஏற்பக் காணும் முறைமையும் சொல்லும் முறைமையும் முதலாயின
. செவ்விதன் சொல்லை
ஏற்றுக் கொள்ளும் மன நிகழ்ச்சி
. அது காலவயத்ததாகலின் காலம் என்றார். இடம்: தனக்குத்
துணையாவார் உடனாய இடம்
. எண்ணுதல்: தான் அது
சொல்லுமாறும்
, அதற்கு
அவர் சொல்லும் உத்தரமும்
,
அதற்குப்பின் தான் சொல்லுவனவுமாக இவ்வாற்றான் மேன்மேல் தானே கற்பித்தல். வடநூலார் இவ்விரு
வகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையும் கூட்டித் தூதரைத் தலை
, இடை, கடை, என்று வகுத்துக்
கூறினாராகலின்
, அவர்
மதமும் தோன்றத்
தலைஎன்றார். தூது என்பது
அதிகாரத்தான் வந்தது
. இவை
ஐந்து பாட்டானும் தான் வகுத்துக் கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments