குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : அவையஞ்சாமை.
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
Translation:
Who what they’ve learned, in penetrating
words heve learned to say,
words heve learned to say,
Before the learn’d among the learn’d most
learn’d are they.
learn’d are they.
Explanation:
Those who can agreeably set forth their
acquirements before the learned will be regarded as the most learned among the
learned.
acquirements before the learned will be regarded as the most learned among the
learned.
கலைஞர் உரை:
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.
[ads-post]
மு.வ உரை:
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.
மணக்குடவர் உரை:
கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார், தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார். இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:
கற்றாருள் கற்றார் எனப்படுவர்– கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் – கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார். ( உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.)




