HomeUncategorizedThirukural 833 of 1330 - திருக்குறள் 833 of 1330

Thirukural 833 of 1330 – திருக்குறள் 833 of 1330

Thirukural
833 of 1330 –
திருக்குறள் 833 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பேதைமை.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
Translation:
Ashamed of nothing, searching nothing out,
of loveless heart,
Nought cherishing, ’tis thus the fool will
play his part.
Explanation:
Shamelessness indifference (to what must be
sought after), harshness, and aversion for everything (that ought to be
desired) are the qualities of the fool.
கலைஞர் உரை:
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.

[ads-post]
மு. உரை:
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.
மணக்குடவர் உரை:
நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில். இது பேதையார்செயல் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
நாணாமைநாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமைநாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மையாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமைபேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில்பேதையது தொழில். (நாணவேண்டுபவைபழி பாவங்கள். நாடவேண்டுபவைகருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின்தொழில்என்றார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments