HomeUncategorizedThirukural 836 of 1330 - திருக்குறள் 836 of 1330

Thirukural 836 of 1330 – திருக்குறள் 836 of 1330

Thirukural
836 of 1330 –
திருக்குறள் 836 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பேதைமை.
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
Translation:
When fool some task attempts with
uninstructed pains,
It fails; nor that alone, himself he binds
with chains.
Explanation:
If the fool, who knows not how to act
undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even
adorn himself with fetters.
கலைஞர் உரை:
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

[ads-post]
மு. உரை:
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.
மணக்குடவர் உரை:
ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும். புனைபூணல்சிறைபடுதல்.
பரிமேலழகர் உரை:
கை அறியாப் பேதை வினைமேற் கொளின்செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும்அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல்பின் ஆகாவகை உள்ளழிதல். ‘ஒன்றோஎன்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments