HomeUncategorizedThirukural 868 of 1330 - திருக்குறள் 868 of 1330

Thirukural 868 of 1330 – திருக்குறள் 868 of 1330

Thirukural
868 of 1330 –
திருக்குறள் 868 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பகைமாட்சி.
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.
Translation:
No gracious gifts he owns, faults many
cloud his fame;
His foes rejoice, for none with kindred
claim.
Explanation:
He will become friendless who is without
(any good) qualities. and whose faults are many; (such a character) is a help
to (his) foes.
கலைஞர் உரை:
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.

[ads-post]
மு. உரை:
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.
மணக்குடவர் உரை:
குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின் அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்.
பரிமேலழகர் உரை:
குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம்ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்துஅவ்விலனாதல் தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து. (குணம்இறைமாட்சியுட் சொல்லியன, குற்றம்இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும், துணைசுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின்ஏமாப்புடைத்துஎன்றார். ‘இலனாய்என்னும் செய்தெனெச்சம்உடையஎன வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments