HomeUncategorizedThirukural 876 of 1330 - திருக்குறள் 876 of 1330

Thirukural 876 of 1330 – திருக்குறள் 876 of 1330

Thirukural
876 of 1330 –
திருக்குறள் 876 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பகைத்திறந்தெரிதல்.
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
Translation:
Whether you trust or not, in time of sore
distress,
Questions of diff’rence or agreement cease
to press.
Explanation:
Though (one’s foe is) aware or not of one’s
misfortune one should act so as neither to join nor separate (from him).
கலைஞர் உரை:
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டு இருப்பதே நலமாகும்.

[ads-post]
மு. உரை:
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.
மணக்குடவர் உரை:
பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தெளியலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தெளிவதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக. இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.
பரிமேலழகர் உரை:
தேறினும் தேறாவிடினும்பகவைனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்: அழிவின்கண் தேறான் பகான்விடல்தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. (முன்தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிகஎன்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, ‘தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிகஎன்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments