HomeUncategorizedThirukural 910 of 1330 - திருக்குறள் 910 of 1330

Thirukural 910 of 1330 – திருக்குறள் 910 of 1330

Thirukural
910 of 1330 –
திருக்குறள் 910 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பெண்வழிச்சேறல்.
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
Translation:
Where pleasures of the mind, that dwell in
realms of thought, abound,
Folly, that springs from overweening
woman’s love, is never found.
Explanation:
The foolishness that results from devotion
to a wife will never be found in those who possess a reflecting mind and a
prosperity (flowing) therefrom.
கலைஞர் உரை:
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.

[ads-post]
மு.வ உரை:
நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.
மணக்குடவர் உரை:
எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம். ண்ணஞ்சேர்தல் – இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்.
பரிமேலழகர் உரை:
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு – கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் – மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும உண்டாகாது. (‘இடன் இல் பருவத்தும்‘ (குறள்-218) எனவும், ‘இடன் இன்றி இரந்தோர்க்கு‘ (கலித்.பாலை.1) எனவும் வந்தமையான், ‘இடன்‘ என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக்காலத்தும் என்பார், ‘எஞ்ஞான்றும்‘ என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம்மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments