HomeUncategorizedThirukural 919 of 1330 - திருக்குறள் 919 of 1330

Thirukural 919 of 1330 – திருக்குறள் 919 of 1330

Thirukural
919 of 1330 –
திருக்குறள் 919 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : வரைவின்மகளிர்.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
Translation:
The wanton’s tender arm, with gleaming
jewels decked,
Is hell, where sink degraded souls of men
abject.
Explanation:
The delicate shoulders of prostitutes with
excellent jewels are a hell into which are plunged the ignorant base
கலைஞர் உரை:
விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் நரகம் எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.

[ads-post]
மு. உரை:
ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.
மணக்குடவர் உரை:
முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம். இஃது இழிந்தார் சார்வரென்றது.
பரிமேலழகர் உரை:
வரைவு இலா மாண் இழையார் மென்தோள்உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது, விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறுஅக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம். (உயர்தற்கு ஏதுவாகலின், ‘புரைஎனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப்புரை இலாப் பூரியர்கள்என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்றமாணிழையார் மென்தோள்என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments