HomeUncategorizedThirukural 938 of 1330 - திருக்குறள் 938 of 1330

Thirukural 938 of 1330 – திருக்குறள் 938 of 1330

Thirukural
938 of 1330 –
திருக்குறள் 938 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : சூது.
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
Translation:
Gambling wastes wealth, to falsehood bends
the soul: it drives away
All grace, and leaves the man to utter
misery a prey.
Explanation:
Gambling destroys property, teaches
falsehood, puts an end to benevolence, and brings in misery (here and
hereafter).
கலைஞர் உரை:
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.

[ads-post]
மு. உரை:
சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.
மணக்குடவர் உரை:
சூது, முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து அல்லற்படுத்துவிக்கும்.
பரிமேலழகர் உரை:
சூதுசூது; பொருள் கெடுத்துதன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇபொய்யை மேற்கொள்ளப் பண்ணி, அருள் கெடுத்துமனத்து எழும் அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும்இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். ‘பொருள் கொடுத்துஎன்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவுமேற்கொளீஇஎன்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments