HomeUncategorizedThirukural 999 of 1330 - திருக்குறள் 999 of 1330

Thirukural 999 of 1330 – திருக்குறள் 999 of 1330

Thirukural
999 of 1330 –
திருக்குறள் 999 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : பண்புடைமை.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
Translation:
To him who knows not how to smile in kindly
mirth,
Darkness in daytime broods o’er all the
vast and mighty earth.
Explanation:
To those who cannot rejoice, the wide world
is buried darkness even in (broad) day light.
கலைஞர் உரை:
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.

[ads-post]
மு. உரை:
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.
மணக்குடவர் உரை:
பண்பின்மையான் ஒருவரோடும் கலந்து உண்மகிழ்தல் மாட்டாதார்க்குப் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கட் கிடந்ததாம்.
பரிமேலழகர் உரை:
நகல் வல்லர் அல்லார்க்குபண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்றுமிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். (எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பிலார்க்கு உலகியல் தெரியாது என்பார், ‘உலகம் இருளின்கண் பட்டதுஎன்றார். ‘பாழ்பட்டன்று இருள்என்று பாடம் ஓதி, ‘இருள் நீங்கிற்றன்றுஎன்று உரைப்பாரும் உளர்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments