சீவக சிந்தாமணி 1111 – 1115 of 3145 பாடல்கள்
1111. பூ வரம்பு ஆய கோதைப் பொன் அனார் புலவி நீக்கி
நூபுரம் திருத்திச் சேந்த நுதி விரல் நொந்த என்பார்
யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும் ஆயின்
கோபுர மாட மூதூர் கூற்று உண விளிக என்பார்
விளக்கவுரை :
1112. கருஞ் சிலை மறவர் கொண்ட கணநிரை விடுக்க வல்ல
இருஞ் சிலை பயின்ற திண் தோட்கு இது தகாது என்று குன்றில்
கருங் கடல் துளுப்பிட்டாங்குக் கல் எனக் கலங்கி காமர்
அருங் கடி அரண மூதூர் ஆகுலம் மயங்கிற்று அன்றே
விளக்கவுரை :
[ads-post]
1113. இங்ஙனம் இவர்கள் ஏக எரி அகம் விளைக்கப் பட்ட
வெம் கணை விடலை தாதை வியன் நகர் அவலம் எய்தி
அங்கு அவர் உகுத்த கண்ணீர் அடித் துகள் அவிப்ப நோக்கிப்
பொங்கு அமர் உழக்கும் வேலான் புலம்பு கொண்டு அழேற்க என்றான்
விளக்கவுரை :
1114. மின்னினால் மலையை ஈர்ந்து வேறு இரு கூறு செய்வான்
துன்னினான் துளங்கின் அல்லால் துளங்கல் அம் மலையிற்கு உண்டே
அன்னதே துணிந்த நீதி அரு நவை நமனும் ஆற்றான்
என்னை நேர் நின்று வாழ்தல் இருநிலத்து ஆவது உண்டே
விளக்கவுரை :
1115. வளை கடல் வலையின் சூழ்ந்து மால் வரை வேலி கோலி
உளை அரி படுக்கல் உற்றான் படுப்பினும் படுக்க மற்று என்
கிளை அழ என்னை வாள்வாய் கீண்டிடல் உற்று நின்றான்
தளை அவிழ் கண்ணி சிந்தத் தன்தலை நிலத்தது அன்றே
விளக்கவுரை :




