Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 1116 - 1120 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1116 – 1120 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1116 – 1120 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1116. நீர் அகம் பொதிந்த மேகம் நீல் நிற நெடுநல் யானைப்
போர் முகத்து அழலும் வாள்கைப் பொன் நெடுங் குன்றம் அன்னான்
ஆர் கலி யாணர் மூதூர் அழுது பின் செல்லச் செல்வான்
சீர் உறு சிலம்பி நூலால் சிமிழ்ப்பு உண்ட சிங்கம் ஒத்தான்

விளக்கவுரை :

1117. மன்னர் தம் வெகுளி வெந்தீ மணி முகில் காணம் மின்னிப்
பொன் மழை பொழியின் நந்தும் அன்று எனின் புகைந்து பொங்கித்
துன்னினார் தம்மை எல்லாம் சுட்டிடும் என்று செம்பொன்
பன்னிரு கோடி உய்த்துக் கந்துகன் பணிந்து சொன்னான்

விளக்கவுரை :

[ads-post]

1118. மன்னவ அருளிக் கேண்மோ மடந்தை ஓர் கொடியை மூதூர்
நின் மதக் களிறு கொல்ல நினக்கு அது வடு என்று எண்ணி
என் மகன் அதனை நீக்கி இன் உயிர் அவளைக் காத்தான்
இன்னதே குற்றம் ஆயின் குணம் இனி யாது வேந்தே

விளக்கவுரை :

1119. நாண் மெய்க் கொண்டு ஈட்டப் பட்டார் நடுக்கு உறும் நவையை நீக்கல்
ஆண் மக்கள் கடன் என்று எண்ணி அறிவு இன்மை துணிந்த குற்றம்
பூண் மெய்க் கொண்டு அகன்ற மார்ப பொறுமதி என்று பின்னும்
நீண்மைக் கண் நின்று வந்த நிதி எலாம் தருவல் என்றான்

விளக்கவுரை :

1120. வாழியர் இறைவ தேற்றான் மா நிரை பெயர்த்த காளை
பீழைதான் பொறுக்க என்ன பிறங்கிணர் அலங்கல் மாலை
சூழ் கதிர் ஆரம் வீழ்நூல் பரிந்து அற நிமிர்ந்து திண் தோள்
ஊழ் பிணைந்து உருமின் சீறி உடல் சினம் கடவச் சொன்னான்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments