சீவக சிந்தாமணி 1141 – 1145 of 3145 பாடல்கள்
1141. காலத் தீ நகரை மேயக் கடி அரண் கடிந்த அம்பின்
சாலத் தீச் சவரர் கோலம் செய்து நம் மறவர் ஈண்டிக்
கோலத் தீ வேலினானைக் கோயிலுள் வளைப்ப இப்பால்
ஆலைத்தீ இடங்கள் தோறும் ஆகுலம் செய்தும் என்றான்
விளக்கவுரை :
1142. சிறைப் புறம் காத்துச் செல்லு மதனனைத் தெருவில் வீழப்
பிறைத்தலை அம்பில் சென்னி பெருநிலத்து இடுவல் இட்டால்
மறுக்கு உற்று மள்ளர் நீங்க மைந்தனைக் கொண்டு போகி
அறைத் தொழிலார்க்கும் செல்லா அரு மிளை புகுமின் என்றான்
விளக்கவுரை :
[ads-post]
1143. மாற்றவர் மலைப்பின் ஆங்கே வாள் கடாக் கொண்டு நொய்தா
வேற்று உலகு ஏற்றி நும் பின் விரை தர்வேன் உலகிற்கு எல்லாம்
ஆற்றிய நட்பு வல்லே வலிப்பு உறீஇ இடுமின் என்றான்
கூற்றங்கள் பலவும் தொக்க கூற்றத்தில் கூற்றம் ஒப்பான்
விளக்கவுரை :
1144. காலனைச் சூழ்ந்த நோய்போல் நபுலமா விபுலர் சூழ
வேலினை ஏந்தி நந்தன் வெருவரத் தோன்ற லோடும்
மாலை தன் தாதை தானும் மக்களும் வந்து கூடிப்
பாலவர் பிறரும் ஈண்டிப் பாய் புலி இனத்தின் சூழ்ந்தார்
விளக்கவுரை :
1145. மட்டுவாய் அவிழ்ந்த தண் தார்த் தாமரை நாமன் சொன்ன
கட்டமை நீதி தன் மேல் காப்பு அமைந்து இவர்கள் நிற்பப்
பட்டு உலாய்க் கிடந்த செம்பொன் கலை அணி பரவை அல்குல்
இட்டு இடைப் பவளச் செவ்வாய்த் தத்தையும் இதனைக் கேட்டாள்
விளக்கவுரை :




