Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 1976 - 1980 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1976 – 1980 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1976 – 1980 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1976. பூம்பாவை வந்து பிறந்தாள் அப்பிறந்த போழ்தே
ஆம்பால எல்லாம் அறிவார் அன்று எழுதி இட்டார்
தூம்பு யாதும் இல்லக் குளம் போன்றது என் தோமில் பண்டம்
கூம்பாத செல்வக் கொடியே இது கேண்மோ என்றான்

விளக்கவுரை :

1977. மங்கைக்கு உரியான் கடை ஏறும் வந்து ஏறலோடும்
வங்கம் நிதியம் உடன் வீழும் மற்று அன்றி வீழாது
எங்கும் தனக்கு நிகர் இல்லவன் ஏற்ற மார்பம்
நங்கைக்கு இயன்ற நறும் பூ அணைப் பள்ளி என்றான்

விளக்கவுரை :

[ads-post]

1978. ஏழ் ஆண்டின் மேலும் இரண்டு ஆண்டு இரண்டு எய்தி நின்றாள்
வீழா நிதியும் உடன் வீழ்ந்தது வில் வலாய்க்கே
ஊழாயிற்று ஒல்கும் நுசுப்பு அஃக உருத்து வீங்கிச்
சூழ் ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான்

விளக்கவுரை :

1979. ஏற்ற கைத் தொடி வீழ்ந்து என ஏந்தலைத்
தேற்றினான் திருமா நலம் செவ்வனே
தோற்ற மாதரும் தோன்றலைக் காண்டலும்
ஆற்றினாள் தனது ஆவியும் தாங்கினாள்

விளக்கவுரை :

1980. அம் பொன் கொம்பு அனையாளையும் வார் கழல்
செம் பொன் குன்று அனையானையும் சீர் பெறப்
பைம் பொன் நீள் நகர்ப் பல் இயம் ஆர்த்து எழ
இம்பர் இல்லது ஓர் இன்பம் இயற்றினார்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments