Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 2006 - 2010 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2006 – 2010 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2006 – 2010 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2006. கடைந்த பொன் செப்பு எனக் கதிர்த்து வீங்கின
வடம் சுமந்து எழுந்தன மாக் கண் வெம் முலை
மடந்தை தன் முகத்த என் மனத்தின் உள்ளன
குடங்கையின் நெடியன குவளை உண் கணே

விளக்கவுரை :

2007. ஏத்தரு மல்லிகை மாலை ஏந்திய
பூத் தலைக் கருங் குழல் புரியினால் புறம்
யாத்து வைத்து அலைக்கும் இவ் அருள் இலாள் நலம்
காய்த்தி என் மனத்தினைக் கலக்கு கின்றதே

விளக்கவுரை :

[ads-post]

2008. சில் அரிக் கிண்கிணி சிலம்பும் சீறடிச்
செல்வி தன் திரு நலம் சேரும் வாயில்தான்
அல்லல் அம் கிழவன் ஓர் அந்தணாள னாய்ச்
செல்லல் யான் தெளி தகவு உடைத்து என்று எண்ணினான்

விளக்கவுரை :

2009. அணங்கு அரவு உரித்த தோல் அனைய மேனியன்
வணங்கு நோன் சிலை என வளைந்த யாக்கையன்
பிணங்கு நூல் மார்பினன் பெரிது ஓர் பொத்தகம்
உணர்ந்து மூப்பு எழுதினது ஒப்பத் தோன்றினான்

விளக்கவுரை :

2010. வெண் நரை உடம்பினன் விதிர்த்த புள்ளியன்
நுண் நவிர் அறுவையன் நொசிந்த நோக்கினன்
கண் நவிர் குடையினன் கைத் தண்டு ஊன்றினன்
பெண் நலம் காதலின் பேயும் ஆயினான்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments