சீவக சிந்தாமணி 2001 – 2005 of 3145 பாடல்கள்
2001. காமனே செல்லினும் கனன்று காண்கிலாள்
வேம் எனக்கு உடம்பு எனும் வேய் கொள் தோளியை
ஏமுறுத்து அவள் நலம் நுகரின் எந்தையை
யாம் எலாம் அநங்க மா திலகன் என்றுமே
விளக்கவுரை :
2002. தாசியர் முலைகள் தாக்கத் தளை அவிழ்ந்து உடைந்த தண் தார்
வாசம் கொண்டு இலங்கும் முந்நூல் வலம் படக் கிடந்த மார்ப
பேசிய பெயரினாளைப் பேது உறாது ஒழிவேன் ஆகின்
ஆசும் அன்பு இலாத புன் பெண் கூந்தல் யான் அணைவல் என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2003. வண்டு தேன் சிலை கொள் நாணா மாந்தளிர் மலர்கள் அம்பாக்
கொண்டவன் கோட்டம் தன்னுள் கொடியினைக் கொணர்ந்து நீலம்
உண்டது காற்றி ஆண் பேர் ஊட்டுவல் உருவக் காமன்
கண்ட பொன் படிவம் சார்ந்து கரந்து இரு நாளை என்றான்
விளக்கவுரை :
2004. உழைக் கணாளர்க்கு உரைத்து எழுந்தான் அரோ
இழைக்கண் வெம் முலை இட்டிடை ஏந்து அல்குல்
மழைக்கண் மாதரை மால் உறு நோய் செய்வான்
முழைக்கண் வாள் அரி ஏறு அன மொய்ம்பினான்
விளக்கவுரை :
2005. சோரும் காரிகையாள் சுரமஞ்சரி
ஆரம் சூடிய அம் முலை பூந் தடம்
தாரும் மார்பமும் தண் எனத் தோய்வதற்கு
ஓரும் உள்ளம் உடன்று எழுகின்றதே
விளக்கவுரை :




