சீவக சிந்தாமணி 2016 – 2020 of 3145 பாடல்கள்
2016. பாவம் இது நோவ உரையன்மின் முது பார்ப்பார்
சாவர் தொடினே கடிது கண்ட வகை வண்ணம்
ஓவியர் தம் பாவையினொடு ஒப்பரிய நங்கை
ஏவல் வகை கண்டு அறிதும் என்று சிலர் சொன்னார்
விளக்கவுரை :
2017. கைய வளை மைய குழல் ஐ அரிய வாள் கண்
நையும் இடை வெய்ய முலை நங்கை ஒரு பார்ப்பான்
உய்வது இலன் ஊழின் முது மூப்பினொடும் வந்தான்
செய்வது உரை நொய்தின் எனச் சேறும் எழுக என்றாள்
விளக்கவுரை :
[ads-post]
2018. மாலை பல தாழ்ந்து மதுப் பிலிற்றி மணம் கமழும்
கோல அகில் தேய்வை கொழும் சாந்தம் முலை மெழுகிப்
பாலை மணியாழ் மழலை பசும் பொன் நிலத்து இழிவாள்
சோலை வரை மேல் இழியும் தோகை மயில் ஒத்தாள்
விளக்கவுரை :
2019. சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப
வேறுபடு மேகலைகள் மெல்லென மிழற்றச்
சேறுபடு கோதை மிசை வண்டு திசை பாட
நாறு மலர்க் கொம்பர் நடை கற்பது என வந்தாள்
விளக்கவுரை :
2020. வந்த வரவு என்னை என வாள் கண் மடவாய் கேள்
சிந்தை நலிகின்ற திரு நீர்க் குமரி ஆட
அந்தில் அதின் ஆய பயன் என்னை மொழிக என்றாள்
முந்தி நலிகின்ற முது மூப்பு ஒழியும் என்றான்
விளக்கவுரை :




