சீவக சிந்தாமணி 2026 – 2030 of 3145 பாடல்கள்
2026. தமிழ் தழிய சாயலவர் தங்கு மலர்த் தூ நீர்
உமிழ் கரகம் ஏந்த உரவோன் அமர்ந்து பூசி
அமிழ்து அனைய பஞ்ச முக வாசம் அமைத்து ஆய்ந்த
கமழ் திரையும் காட்ட அவை கொண்டு கவுள் அடுத்தான்
விளக்கவுரை :
2027. வல்லது எனை என்ன மறை வல்லன் மடவாய் யான்
எல்லை எவன் என்னப் பொருள் எய்தி முடிகாறும்
சொல்லும் இனும் நீவிர் கற்ற காலம் எனத் தேன் சோர்
சில் என் கிளிக் கிளவி அது சிந்தை இலன் என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2028. இன்னவர்கள் இல்லை நிலத்து என்று வியந்து ஏத்தி
அன்னம் அன மெல் நடையினாள் அமர்ந்து நோக்கப்
பின்னை இவள் போகு திறம் பேசும் என எண்ணிக்
தன்னம் சிறிதே துயின்று தாழ அவள் நக்காள்
விளக்கவுரை :
2029. கோல மணி வாய்க் குவளை வாள் கண் மடவாளைச்
சால முது மூப்பு உடைய சாமி முகம் நோக்கிக்
காலும் மிக நோம் சிறிது கண்ணும் துயில்குற்றேன்
ஏலம் கமழ் கோதை இதற்கு என் செய்கு உரை என்றான்
விளக்கவுரை :
2030. மட்டு விரி கோதை மதுவார் குழலினாள் தன்
பட்டு நிணர் கட்டில் பரிவு இன்றி உறைக என்றாள்
இட்ட அணை மேல் இனிது மெல் என அசைந்தான்
கட்டு அழல் செய் காமக் கடலைக் கடையல் உற்றான்
விளக்கவுரை :




