Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 2031 - 2035 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2031 – 2035 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2031 – 2035 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2031. காலையொடு தாழ்ந்து கதிர் பட்டது கலங்கி
மாலையொடு வந்து மதி தோன்ற மகிழ் தோன்றி
வேல் அனைய கண்ணியர் தம் வீழ் துணைவர் திண்தோள்
கோல முலையால் எழுதக் கூடியதை அன்றே

விளக்கவுரை :

2032. ஏந்து மலர்ச் சேக்கை அகில் வளர்த்த இடு புகையும்
ஆய்ந்த மலர்க் கோதை அமிர்து உயிர்க்கும் நறும் புகையும்
கூந்தல் அகில் புகையும் துகில் கொழும் என் நறும் புகையும்
வாய்ந்த வரை மழையின் உயர் மாடத்து எழுந்தனவே

விளக்கவுரை :

[ads-post]

2033. ஆசு இல் அடு பால் அமிர்தம் சிறிய அயின்று அம் பூங்
காசு இல் கடி மாலை நொய்ய கலம் மதி கவற்கும்
தூசு நறுஞ் சாந்து இனிய தோடு இவைகள் தாங்கி
மாசு இல் மடவார்கள் மணி வீணை நரம்பு உளர்ந்தார்

விளக்கவுரை :

2034. பூஞ் சதங்கை மாலை புகழ்க் குஞ்சிப் பொரு வில்லார்
வீங்கு திரள் தோளும் தட மார்பும் விரை மெழுகித்
தீம் கரும்பு மென்று அனைய இன்பவளச் செவ்வாய்த்
தேன் கொள் அமிர்து ஆர்ந்து செழுந் தார் குழையச் சேர்ந்தார்

விளக்கவுரை :

2035. பொன் அறையுள் இன் அமளிப் பூ அணையின் மேலான்
முன்னிய தன் மன்றல் அது முந்து உற முடிப்பான்
மன்னும் ஒரு கீதம் மதுரம் பட முரன்றாற்கு
இன் அமிர்தம் ஆக இளையாரும் அது கேட்டார்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments