Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 2061 - 2065 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2061 – 2065 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2061 – 2065 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2061. எரி மணிக் கலாபத்து இட்ட இந்திர நீலம் என்னும்
ஒரு மணி உந்தி நேரே ஒரு கதிர் உமிழ்வதே போல்
அரு மணிப் பூணினாள் தன் அவ்வயிறு அணிந்த கோலத்
திரு மயிர் ஒழுக்கம் வந்து என் திண் நிறை கவர்ந்தது அன்றே

விளக்கவுரை :

2062. தேறினேன் தெய்வம் என்றே தீண்டிலேன் ஆயின் உய்யேன்
சீறடி பரவ வந்தேன் அருள் எனத் தொழுது சேர்ந்து
நாறு இரும் குழலினாளை நாகு அணை விடையின் புல்லிக்
கோல் தொடுத்து அநங்கன் எய்யக் குழைந்து தார் திவண்டது அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2063. கலை புறம் சூழ்ந்த அல்குல் கார் மயில் சாயலாளும்
மலை புறம் கண்ட மார்பின் வாங்கு வில் தடக்கை யானும்
இலை புறம் கண்ட கண்ணி இன் தமிழ் இயற்கை இன்பம்
நிலை பெற நெறியின் துய்த்தார் நிகர் தமக்கு இலாத நீரார்

விளக்கவுரை :

2064. குங்குமம் குயின்ற கொம்மைக் குவி முலை குளிர்ப்பத் தைவந்து
அம் கலுழ் மேனி அல்குல் காசுடன் திருத்தி அம்பொன்
பொங்கு பூஞ் சிலம்பில் போர்த்த பூந் துகள் அவித்து மாதர்
கொங்கு அலர் கோதை சூட்டிக் குழல் நலம் திருத்தினானே

விளக்கவுரை :

2065. ஆரகமழ் மதுவும் சாந்தும் ஏந்தி வான்மதுத் துளித்து வண்டும் சுரும்பும் மூசும்
தேன்ஆர் பூங் கோதாய் நினக்குக் காமன் சிலைஇரண்டும் செவ்வனே கோலித் தந்தான்
தான்ஆரப் பண்ணித் தடறு நீக்கித் தண் குருதி தோய்த்துத் தகைமை சான்ற
ஊன் ஆர்ந்த ஓர் இணை அம்பும் தந்தான் என்னை உளன் ஆக வேண்டினானே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments