Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 2056 - 2060 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2056 – 2060 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2056 – 2060 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2056. பொன் நிலம் சென்னி புல்ல இட முழந்தாளை ஊன்றி
மின் அவிர் மாலை மென் பூங் குழல் வலத் தோளின் வீழக்
கன்னி அம் கமுகின் கண்போல் கலன் அணி எருத்தம் கோட்டித்
தன் இரு கையும் கூப்பித் தையல் ஈது உரைக்கும் அன்றே

விளக்கவுரை :

2057. தாமரைச் செங்கண் செவ்வாய்த் தமனியக் குழையினாய் ஓர்
காமம் இங்கு உடையேன் காளை சீவகன் அகலம் சேர்த்தின்
மா மணி மகரம் அம்பு வண் சிலைக் கரும்பு மான் தேர்
பூ மலி மார்ப ஈவல் ஊரொடும் பொலிய என்றாள்

விளக்கவுரை :

[ads-post]

2058. மட்டு அவிழ் கோதை பெற்றாய் மனம் மகிழ் காதலானை
இட்டிடை நோவ நில்லாது எழுக என ஏந்தல் தோழன்
பட்டிமை உரைத்தது ஓராள் பரவிய தெய்வம்தான் வாய்
விட்டு உரைத்திட்டது என்றே வேல் கணாள் பரவி மீண்டாள்

விளக்கவுரை :

2059. அடி இறை கொண்ட செம் பொன் ஆடகச் சிலம்பினாள் அக்
கடி அறை மருங்கில் நின்ற மைந்தனைக் கண்டு நாணி
வடியுறு கடைக் கண் நோக்க நெஞ்சு துட்கு என்ன வார் பூங்
கொடியுற ஒசிந்து நின்றாள் குழை முகத் திருவோடு ஒப்பாள்

விளக்கவுரை :

2060. இலங்கு பொன் ஓலை மின்ன இன் முகம் சிறிது கோட்டி
அலங்கலும் குழலும் தாழ அருமணிக் குழை ஓர் காதில்
கலந்து ஒளி கான்று நின்று கதிர் விடு திருவில் வீச
நலம் கனிந்து உருகி நின்றாள் நாம வேல் காமர் கண்ணாள்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments