சீவக சிந்தாமணி 2071 – 2075 of 3145 பாடல்கள்
2071. கனை கடல் அமுதும் தேனும் கலந்து கொண்டு எழுதப் பட்ட
புனை கொடி பூத்ததே போல் பொறுக்கலா நுசுப்பின் பாவை
நனை குடைந்து உண்டு தேக்கி நல் மணி வண்டு பாடும்
புனை கடி மாலை மாதர் திறத்து இது மொழிந்து விட்டார்
விளக்கவுரை :
2072. ஐயற்கு என்று உரைத்த மாற்றம் கேட்டலும் அலங்கல் நாய்கன்
வெய்ய தேன் வாய்க் கொண்டாற் போல் விழுங்கலோடு உமிழ்தல் தேற்றான்
செய்வது என் நோற்றிலாதேன் நோற்றிலாள் திறத்தின் என்று
மையல் கொண்டு இருப்ப அப்பால் குமரி தன் மதியின் சூழ்ந்தாள்
விளக்கவுரை :
[ads-post]
2073. பொற்பு அமை தாமக் கந்து பொருந்திய மின்னுப் போல
எல் பக எரியும் மாலைப் பவளத் தூண் பொருந்தி இன்னீர்க்
கற்பு எனும் மாலை வீசி நாண் எனும் களி வண்டு ஓப்பிச்
சொல் புகர் இன்றித் தோழிக்கு அறத்தினோடு அரிவை நின்றாள்
விளக்கவுரை :
2074. வழி வளர் மயில் அம் சாயல் பவழப் பூம் பாவை அன்ன
கழி வளர் கயல் கண் நங்கை கற்பினை அறிந்து தோழி
அழி மது மாலை சேர்த்தி அடி பணிந்து ஆர வாழ்த்திப்
பொழி மதுப் புயல் ஐங் கூந்தல் செவிலியைப் பொருந்திச் சொன்னாள்
விளக்கவுரை :
2075. நனை வளர் கோதை நற்றாய் நங்கைக்கு ஈது உள்ளம் என்று
சுனை வளர் குவளை உண் கண் சுமதிக்குச் செவிலி செப்பக்
கனை இருள் கனவில் கண்டேன் காமர் பூம் பொய்கை வற்ற
அனையது ஆம் கன்னி நீர் இன்று அற்றதாம் நங்கைக்கு என்றாள்
விளக்கவுரை :




