Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 2076 - 2080 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2076 – 2080 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2076 – 2080 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2076. கெண்டையும் சிலையும் திங்கள் இளமையும் கிடந்து தேம் கொள்
தொண்டை அம் கனியும் முத்தும் தொழுதக அணிந்து தூங்கும்
குண்டலம் உடைய திங்கள் இது எனும் முகத்தி தாதை
வண்புகழ்க் குபேர தத்தன் கேட்டனன் மனைவி சொன்னாள்

விளக்கவுரை :

2077. செரு விளைத்து அனலும் வேலோய் சிறு முதுக் குறைவி தானே
பெரு வளைப்பிட்டுக் காத்த கற்பு இது போலும் ஐயன்
கரி விளைத்து ஆய்ந்த சுண்ணம் வாட்டினன் என்று கண்டாய்
திரு விளை தேம் பெய் மாரி பால் கடல் பெய்தது என்றாள்

விளக்கவுரை :

[ads-post]

2078. கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கு எலாம் உணர்த்தி யார்க்கும்
வேட்பன அடிசில் ஆடை விழுக்கலன் மாலை சாந்தம்
கோள் குறைவு இன்றி ஆக்கிக் குழுமு இயம் கறங்கி ஆர்ப்ப
நாள் கடி மாலையாற்கு நங்கையை நல்கினானே

விளக்கவுரை :

2079. பரியகம் சிலம்பு பைம் பொன் கிண் கிணி ஆர்ந்த பாதத்து
அரிவையர் ஆடல் மிக்கார் அருமணி வீணை வல்லார்
உரிய நூற்று எண்மர் செம்பொன் ஒன்றரைக் கோடி மூன்று ஊர்
எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என் மகட்கு என்று சொன்னான்

விளக்கவுரை :

2080. மாசு அறு மணியும் முத்தும் வயிரமும் ஒளிரும் மேனி
ஆசு அறு செம் பொன் ஆர்ந்த அலங்கல் அம் குன்று அனானும்
தூசு உறு பரவை அல்குல் தூ மணிக் கொம்பு அனாளும்
காசு அறக் கலந்த இன்பக் கடல் அகத்து அழுந்தினாரே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments