சீவக சிந்தாமணி 2501 – 2505 of 3145 பாடல்கள்
2501. அன்னப் பெடை நடுக்கி அசைந்து தேற்றா நடையாளும்
மன்னர் குடை நடுக்கும் மாலை வெள் வேல் மறவோனும்
மின்னும் மணிக் குடத்தின் வேந்தர் ஏந்தப் புனல் ஆடிப்
பொன் அம் கடி மலரும் துகிலும் சாந்தும் புனைந்தாரே
விளக்கவுரை :
2502. எம் சுற்றம் என்று இரங்காது ஆகம் எல்லாம் கவர்ந்து இருந்து
தம் சுற்றம் வேண்டாத முலைக் கீழ் வாழ்வு தளர்கின்ற
நஞ்சு உற்ற வேல் நெடுங் கண் பாவை நல்கூர் சிறு நுசுப்பிற்கு
அஞ்சு உற்றுழிப் புலர்ந்து ஆங்கு அணிந்தார் அம் மணி வடமே
விளக்கவுரை :
[ads-post]
2503. சுடுமண் மிசை மாரி சொரியச் சூழ்ந்து சுமந்து எழுந்து
நெடு நல் நிமிர் ஆவி நாறும் நெய் தோய் தளிர் மேனி
துடி நுண் இடை பெருந் தோள் துவர்வாய் ஏழை மலர் மார்பன்
கடி நல் மலர்ப் பள்ளி களிப்பக் காமக் கடல் ஆழ்ந்தான்
விளக்கவுரை :
2504. வழங்கு தாரவன் மார்பு இடை மட்டு உகப்
புழுங்கு கோதை பொற்பின் திறம் பேசலாம்
விழுங்கு மேகம் விடாது தழீஇக் கிடந்து
ஒழிந்த மின்னுக் கொடி ஒத்து ஒழிந்திட்டாள்
விளக்கவுரை :
2505. தாம மார்பனும் தையலும் மெய் உணர்வு
ஆம் இது என்று அறியாது களித்தவர்
தூமம் கொப்புளிக்கும் துகில் சேக்கை மேல்
காமன் அப்பு அணைக் கள் உக வைகினார்
விளக்கவுரை :




