சீவக சிந்தாமணி 2511 – 2515 of 3145 பாடல்கள்
2511. பெற்ற கூழ் உண்டு நாளும் பிணி உழந்து இருத்தும் பேதாய்
முற்றிமை சொல்லின் நங்கை மூன்று நாள் அடிசில் காட்டாள்
பொன்தொடி தத்தையீரே பொத்தும் நும் வாயை என்றே
கற்பித்தார் பூவையார் தம் காரணக் கிளவி தம்மால்
விளக்கவுரை :
2512. பழியொடு மிடைந்த தேனும் சீறடி பரவினாற்கு
வழிபடு தெய்வம் ஆகி வரம் கொடுத்து அருளல் வேண்டும்
ஒழி படைக் களிறு போல உயங்கவும் உருகி நோக்காப்
பிழிபடு கோதை போல் ஆம் பெண்டிரைக் கெடப் பிறந்தாள்
விளக்கவுரை :
[ads-post]
2513. ஈன்ற தாய் யானும் ஆக இதனைக் கண்டு உயிரை வாழேன்
நான்று யான் சாவல் என்றே நலக் கிளி நூலின் யாப்ப
மான்ற அவள் மருண்டு நக்காள் வாழிய வரம் பெற்றேன் என்று
ஆன்று அவன் ஆரப் புல்லி அணிநலம் பரவினானே
விளக்கவுரை :
2514. நிறை ஓத நீர் நின்று நீள் தவமே செய்யினும் வாழி நீலம்
அறையோ அரிவை வரி நெடுங் கண் ஓக்கிலையால் வாழி நீலம்
கண் ஒவ்வாயேனும் களித்து நகுதி நின்
வண்ணம் இதுவோ மது உண்பார் சேரியையோ வாழி நீலம்
விளக்கவுரை :
2515. பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை என்னும்
மாண்பு இலாதாரை வைத்தார் என் உறார் என்று நக்கு
நாண்குலாய்க் கிடந்த நங்கை நகை முக அமுதம் ஈந்தாள்
பூண்குலாய்க் கிடந்த மார்பின் பொன் நெடுங் குன்று அனாற்கே
விளக்கவுரை :




