சீவக சிந்தாமணி 2516 – 2520 of 3145 பாடல்கள்
2516. நலம் குவித்த அனைய மாதர் நல் நலம் ஆய எல்லாம்
புலம்புவித்து அருளின் நீங்கிப் பகைப்புலம் புக்க வேந்தின்
கலங்குவித்த அனைய நம்பி கவர்ந்திடக் கலாபம் ஏங்கச்
சிலம்பு நெந்து இரங்கத் தேன்தார் பரிந்து தேன் எழுந்தது அன்றே
விளக்கவுரை :
2517. திரு நிறக் காம வல்லி திருக் கவின் கொண்டு பூத்துக்
பெருநிறம் கவினி ஆர்ந்த கற்பகம் பிணைந்ததே போல்
அரு நிறக் குருசில் மார்பத்து அசைந்தனள் அலங்கல் வேலும்
நெரி புறத் தடற்று வாளும் நீலமும் நிகர்த்த கண்ணாள்
விளக்கவுரை :
[ads-post]
2518. மணிக்கண் மாமயில் சாயல் மாதரும்
அணிக் கந்து அன்ன தோள் அரச சீயமும்
பிணித்த காதலால் பின்னிச் செல்வுழிக்
கணித்த நாள்கள் ஏழ் கழிந்த காலையே
விளக்கவுரை :
2519. சூட்டும் சுண்ணமும் அணிந்து சுந்தரம்
ஓட்டி ஒண் பொன் நூல் ஓங்கு தாரொடு
பூட்டிக் குண்டலம் பொற்பப் பெய்த பின்
மோட்டு முத்து ஒளிர் வடம் வளாயினார்
விளக்கவுரை :
2520. பால் நுரை அன பைந்துகில் அணிந்து
ஆன் நிரை இனத்து அலங்கல் ஏறு அனான்
மான் நிரை இனம் மருளும் நோக்கினார்
ஊன் உயிர் உணும் ஒருவன் ஆயினான்
விளக்கவுரை :




