HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4251 - 4300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4251 – 4300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4251 – 4300 மூலிகைச் சரக்குகள்

குய்கிலியமரம் – வெண்குங்கிலியம்
குங்குமச்சத்திச்சாரணை – சிவப்புச்சத்திச்சாரணை
குங்குமச்சிவதை – சிவப்பு சிவதை
குய்குமச்சீதா செங்கழுநீர் – சிவப்புச்சீதாசெங்கழுநீர்க்கொடி
குங்குமச்செந்தொட்டி – சிவப்புச்செந்தொட்டிச்செடி
குங்குமச் செம்பரத்தை – அடுக்குச்செம்பரத்ததைச்செடி
குங்கமச்செம்மந்தாரை – சிவப்புமந்தாரைமரம்
குங்குமச்செவ்வந்தி – சிவப்புச்செவ்வந்திச்செடி
குங்குமச்செழு மலர்க்கொன்னை – சிவப்புக்கொன்னைமரம்
குங்கும பருத்தி – செம்பருத்திச் செடி
குங்குமபருத்திராச்செடி – பெருஞ்செம்பருத்திச்செடி
குங்குமபாஷாணம் – அஞ்சற்குளச்சிப்பாஷாணம்
குங்குமபாஷிதச்செடி – செந்துளசிச்செடி
குங்குமப்புளியம்பிரண்டை – சிவப்புப்புளியம்பிரண்டை
குங்குமப்பூமரம் – குஞ்சிதப்பூமரம்
குங்குமப்பேரிகமரம் – சிவப்பகத்திமரம்
குங்குமவடுக்கலரி – செவ்வடுக்கலரி
குங்குமவர்ணிமரம் – இரத்தப்புளிமரம்
குங்குலு – குங்கிலியம்
குங்குளிகவரிசி – வாலுளுவையரிசி
குசந்தனம் – செஞ்சந்தனம்
குசந்தாதிகச்செடி – சதையொட்டிச்செடி
குசப்புல் – தருப்பைப்புல்
குசம் – தொப்புள்
குசம்பாச்செடி – சீமைச்செடி
குசம்பைச்செடி – செந்துருக்கஞ்செடி
குசேசயக்கொடி – தாமரைக் கொடி
குசேசியச்செடி – செந்தும்பைச்செடி
குசைப்புல் – தர்ப்பைப்புல்
குச்சகப்புல் – சடையொட்டிப்புல்
குச்சகம் – பற்படாகம்
குச்சகாதிதக்கொடி – சத்திசாரணைக்கொடி
குச்சபாதிச்செடி – சிறு புள்ளடிச்செடி
குச்சப்புரதிமரம் – ஏழிலைப்புலனைமரம்
குச்சப்புல் – நாணற்புல்
குச்சாகரச்செடி – செந்துவரைச்செடி
குச்சிக்கரும்பு – தட்டைக்கரும்பு
குச்சிமஞ்சள் – மரமஞ்சள்
குச்சிராகிதச்செடி – சந்திரகாந்திச்செடி
குஞ்சகாரக்கிழங்கு – புளிநரலை கிழங்கு
குஞ்சணவேர் – சிவதைவேர்
குஞ்சரக்கொடி – கருங்குவக்கொடி
குஞ்சரசுரபிச்செடி – செவ்வந்திச்செடி
குஞ்சரமயக்கிச்செடி – யானைமயக்கிச்செடி
குஞ்சரமரம் – அத்திமரம்
குஞ்சரமேற்புல்லுருவி – அஞ்சரமேற்புல்லுருவி
குஞ்சாராகிதச்செடி – சங்கங்குச்செடி
குஞ்சராசனமரம் – அரசமரம்
குஞ்சரிமரம் – அத்திமரம்
குஞ்சலக்கொடி – குன்றிமணிக்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments