சித்த வைத்திய அகராதி 2451 – 2500 மூலிகைச் சரக்குகள்
எள்ளுச்செடி – கருப்பெள்ளு
எறியுப்பு – கல்லுப்பு
எறியூகரக்கொடி – நீர்ச்சுண்டி
என்புறிக்கொடி – கருஞ்சீந்தி
ஏகலாகிகம் – திப்பிலி
ஏகலியக்கொட்டி – களைக்கொட்டி
ஏகவாசமரம் – ஆலமரம்
ஏகவீரக்கள்ளி – மான்செவிக்கள்ளி
ஏகாரமரம் – வெக்காலிமரம்
ஏசிடாவகம் – அதிமதுரம்
ஏடகமரம் – ஆண்பனைமரம்
ஏடகாமரம் – பனைமரம்
ஏடகமுருங்கை – மலைமுருங்கை
ஏதுகச்செடி – சங்கஞ்செடி
ஏமநாகச்செடி – ஊமத்தைச்செடி
ஏமபத்திரமரம் – மலையாத்திமரம்
ஏமபாதிதமரம் – கள்ளிமரம்
ஏமபுட்பம் – மலைமுல்லை
ஏமபேதி பாஷாணம் – கற்கடகபாஷாணம்
ஏமம் – தங்கம்
ஏமலி – திலகப்பொட்டு
ஏமவதிக்காய் – கடுக்காய்
ஏமவாரிக்காளான் – மலைக்காளான்
ஏமற்கோனிகச்செடி – முதிரைக்கடலைச்செடி
ஏமனீர் – குமரிநீர் – கன்னிநீர்
ஏரண்டஞ்செடி – ஆமணக்கு
ஏரண்டம் – ஆமணக்குமுத்து
ஏரரத்தை – தும்புராஷ்டகம்
ஏரலிக்கொடி – கள்ளிக்கொடி
ஏரழிஞ்சில்மரம் – அழிஞ்சில்மரம்
ஏரிப்பிண்டம் – காக்காச்சிப்பி
ஏரியல்மரம் – வன்னிவாகைமரம்
ஏலக்காய்ச்செடி – நாட்டேலம்
ஏலக்கைக்கோவை – கற்கோவை
ஏலச்செடி – பேரேலச்செடி
ஏலரிசி – ஏலக்கொட்டை
ஏலாகச்செடி – குருக்குச்செடி
ஏலாபரணி – பறங்கிச்சக்கை
ஏலகச்செடி – சங்கஞ்செடி
ஏவாகனச்செடி – சங்கஞ்செடி
ஏவாங்கச்செடி – அசமதாகம்
ஏவாலுகம் – கச்சோலம்
ஏழிலைநொச்சி – நொச்சிச்செடி
ஏழிலைந்துபூதம் – அக்கினி
ஏழிலைப்பாலை – திருநாமப்பாலை
ஏழிலைமயிலை – மயிலைமரம்
ஏழிலைவள்ளிக்கிழங்கு – ஆள்வள்ளிக்கிழங்கு
ஏழைச்சாகிதம் – வள்ளிக்கிழங்கு
ஏனக்கோடு – பன்றிக்கொம்ப
ஏனக்கோடுகத்தூள் – பன்றிகொம்புத்தூள்




