HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 751 - 800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 751 – 800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 751 – 800 மூலிகைச் சரக்குகள்

அரமாரவச்செடி – நாயுருவி
அரமாரிகம் – செவ்வெருக்கலை
அரமியச்செடி – பிரமிச்செடி
அரம்பைப்பூ – வாழைப்பூ
அரம்பைமரம் – வாழைமரம்
அரவக்கிரிடிப்பூடு – கீரிப்பூடு
அரவமணிக்கல் – மணிக்குடல்
அரவிகாந்தகக்சொடி – செவ்விண்டங்கொடி
அரவிந்தக்கொடி – தாமரை
அரவுகடிப்பகை – வேப்பிலை
அரளிச்செடி – அலரிச்செடி
அரன்பாகிகம் – செவ்வாழை
அரன்பீசம் – ரசம்
அரன்பூசைக்கேற்றமரம் – செம்மந்தாரைமரம்
அரன்பெண்டீர் – கெந்தகம்
அரன்மகாபீசமரம் – செவ்வுகா
அரன்மகிச்செடி – மஞ்சட்செடி
அரன்விந்து – ரசம்
அரிகாரம் – சீனாக்காரம்
அரிக்காந்தி – விஷ்ணுகாந்தி
அரிசந்தனமரம் – மால்சந்தனமரம்
அரிசந்தனம் – செஞ்சந்தனம்
அரிசந்திரா மரம் – செவ்வெருக்கலை மரம்    
அரிசம் – மிளகு, மஞ்சள்  
அரிசம்மாரிகம் – நரிக்கொன்னை 
அரிசயமரம் – எலுமிச்சைமரம்  
அரிசரநவ்வல் – நரிநவ்வல்மரம்  
அரிசனம் – மஞ்சள்     
அரிசன்னியக்கொடி – நரிப்பயற்றின்கொடி   
அரிசாகிகமரம் – பெருங்குமிழ் 
அரிசாரணமரம் – மாவுலிங்கமரம் 
அரிசி – நெல்லரிசி     
அரிசிங்கமூலி – சிறியாணங்கை   
அரிசிப்பல் தட்டை – கம்பரிசித்தட்டை    
அரிசிலந்தைச்செடி – நரியிலந்தைச்செடி
அரிசுவை – மிளகு       
அரிச்சனமரம் – மருதமரம்    
அரிச்சோளம் – வெள்ளைசோளம்  
அரிச்சோனகச்செடி – நரியீஞ்சு  
அரிடரோகிணி – கடுகுரோகிணி     
அரிடலோசணம் – நரிவழுக்கை  
அரிட்டம்போக்கிப்பூடு – வெள்ளைப் பூடு    
அரிணம் – சந்தனம்      
அரிதகாச்செடி – நரிவிளாச்செடி  
அரிதகிக்காய் – கடுக்காய்   
அரிதம் – மஞ்சள்        
அரிதாரபாஷானம் – ஆள்கொடிச்சிப்பாஷானம்   
அரிதாரபாஷிகம் – நரிவெங்காயம்   
அரிதாரம் – மாலதாரம்    
அரிதாரவஞ்சி – கானிப்பூண்டு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments