சித்த வைத்திய அகராதி 8001 – 8050 மூலிகைச் சரக்குகள்
திருநீற்றுப்பத்திரி – திருநீற்றுப்பச்சிலை
திருமரம் – அரசமரம்
திருமலர் – தாமரைப்புஷ்பம்
திருமலர்க்கொடி – தாமரைக் கொடி
திருமாலிகமரம் – கானல்முருங்கைமரம்
திருமாலுந்திப்பூ – தாமரைப்பூ
திருமால்கரந்தை – விஷ்ணுகரந்தைச்செடி
திருமால்கொப்பூழ் – சுளுக்குநாயகச்செடி
திருமேனிச்செடி – குப்பைமேனிச்செடி
திருமேனியழகிச்செடி – குப்பைமேனிச்செடி
திருரசமேனிச்செடி – சூரததாவரைச்செடி
திருவட்டம்பிசின் – விளாம்பிசின்
திருவமரம் – வெள்ளகில்மரம்
திருவாத்திமரம் – ஆத்திமரம்
திருவாலமூலி – செவ்வாமணக்குச்செடி
திருவாலிப்பூண்டு – சுனைப்பூண்டுச்செடி
திருவிலைப்பூடு – கீரிப்பூடு
திருவிளப்பூண்டு – திராய்ப்பூண்டு
திருவிளவேர் – சிவதைவேர்
திருவுளவனிதமரம் – சூழ்ப்பிராய்மரம்
திரேந்திகப்பூண்டு – திராய்ப்பூண்டு
திரைகடற்பாசி – கடற்பாசி
திரையலாவிக்கொடி – வெற்றிலைக்கொடி
திரையாப்புல் – கோரைப்புல்
திலகவிருட்சம் – எள்ளுவிருட்சம்
திலதைலம் – நல்லெண்ணெய்
திலபருணிகை – சந்தனம்
திலபன்னிச்செடி – தைவேளைச்செடி
திலம் – எள்ளு
திலரசம் – எள்ளெண்ணெய்
திலவகம் – வெள்ளி
தில்லபம் – ஒட்டுதல்
தில்லைவிருட்சம் – பொன்னம்பலவிருட்சம்
திவசாத்தியச்செடி – அந்திமல்லிகைச்செடி
திவிதிராட்சப்பழம் – கொடிமுந்திரிப்பழம்
திவ்வியகந்தம் – கிராம்பு
திறிகண்டக்கொடி – நெருஞ்சிற்கொடி
திறிதியவள்ளிக்கிழங்கு – செவ்வள்ளிக்கிழங்கு
திறிதூதகச்சுரை – கின்னாக்சுரை
திறிதேகிகம் – பற்படாகம்
திறிதேசிதக் கிழங்கு – கிச்சிலிக் கிழங்கு
திறிபாதிதச்செடி – சிறுபுள்ளடிச்செடி
திறிலாகிதப்பிரண்டை – கிழங்குப்பிரண்டை
திறிலிங்கமரம் – தான்றிமரம்
திறிலேசகிச்செடி – குடமிளகாயச்செடி
திறிலேசரிச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
திறிவாசச்செடி – கத்தரிச்செடி
திறைவிக்குறட்டை – முக்குறட்டைச்செடி
தினகரச்செடி – சூரியகாந்திசெடி
தினவாசக்காய் – கத்தரிக்காய்




