சித்த வைத்திய அகராதி 2651 – 2700 மூலிகைச் சரக்குகள்
கசப்புக்குமிட்டிக்கொடி – பேய்க்குமட்டிக்கொடி
கசப்புக்கையான் – கச்சாந்தரைப்பூடு
கசப்புக்கொடிச்சி – செந்திராய்க்கொடி
கசப்புக்கொழுமிச்சைமரம் – காட்டுக்கொழுமிச்சைமரம்
கசப்புச்சீரிகக்கொடி – கசப்புவெள்ளரிக்கொடி
கசப்புக்சுரை – பேய்ச்சுரை
கசப்புத்திருவேர் – சிவதைவேர்
கசப்புத்துவரை – பேய்த்துவரை
கசப்புத்தோதிகமரம் – கசப்பெலுமிச்சைமரம்
கசப்புப்பசலி – தரைப்பசலி
கசப்புப்பாசிதமரம் – வேப்பமரம்
கசப்புப்பீர்க்கு – பேய்ப்பீர்க்கு
கசப்புப்பீவேலாமரம் – பீவேலாமரம்
கசப்புப்புகையிலை – கைப்புப்புகையிலை
கசப்புமாஞ்சகிக்கொடி – பேய்க்குமட்டிக்கொடி
கசப்புமுருங்கைமரம் – காட்டுமுருங்கைமரம்
கசப்புமூலிகை – கச்சாந்தரை
கசப்புவாதாங்கொட்டை – காட்டுவாதுமைக்கொட்டை
கசப்புவாருதிமரம் – வேப்பமரம்
கசப்புவெப்பாலைமரம் – வெப்பாலைமரம்
கசப்புவெப்பீரிகச்செடி – கருங்கரிப்பான்செடி
கசப்புவெள்ளரிக்கொடி – பேய் வெள்ளரிக்கொடி
கசப்பூலிகக்கொடி – மிதி பாகற்கொடி
கசப்பெலுமிச்சை – காட்டெலுமிச்சைமரம்
கசப்போளம் – கரியபோளம்
கசமாதுகச்செடி – ஊமத்தை
கசமுகத்திப்பிலி – யானைத்திப்பிலி
கசம் – தாமரைக்கொடி
கசவச்செடி – கடுகுச்செடி
கசவம் – கடுகு
கசவாகிதமரம் – கலியாணமுருங்கைமரம்
கசற்பம் – மஞ்சள்
கசாக்கிரப்பூடு – மயிர்ச்சிகைப்பூடு
கசேருகமரம் – தமரத்தைமரம்
கசேவதாமரை – கற்றாமரை
கசோதம் – புராமுட்டிச்செடி
கசோதிகம் – கருப்பௌ;ளு
கச்சகச்செடி – கொள்ளுச்செடி
கச்சக்குமிட்டிக்கொடி – தலைவிரித்தான்கொடி
கச்சக்கோரை – உப்புக்கோரைப்புல்
கச்சந்திராய்ப்பூண்டு – கச்சாந்தரைப்பூண்டு
கச்சாம்பரம் – சந்தன அத்தர்
கச்சாலபாஷானம் – தசமச்ச பாஷானம்
கச்சான்காயம் – வெங்காயம்
கச்சிக்கிழங்கு – சின்னிக்கிழங்கு
கச்சிக்கைரியம் – அரோட்டுமா
கச்சிக்கொடி – சீந்திற்கொடி
கச்சிணார்மரம் – சீமையத்திமரம்
கச்சிணிமரம் – ஆச்சாமரம்
கச்சினிமாதம் – ஒராமாதம்




