சித்த வைத்திய அகராதி 7651 – 7700 மூலிகைச் சரக்குகள்
தமனிதிமரம் – வன்னிமரம்
தமார்க்கதக்கொடி – பீர்க்குக்கொடி
தமார்க்கவமரம் – வேங்கைமரம்
தமாலகப்பத்திரி – தாளிசப்பத்திரி
தமாலகிரிச்செடி – கீழ்காய்நெல்லிச்செடி
தமிசுமரம் – வேங்கைமரம்
தமியவமரம் – விடமருதுமரம்
தம்பட்டையவரை – பாடாவவரைக்கொடி
தம்பதங்கமரம் – விருசமரம்
தம்பலைச்செடி – நிலவிலந்தைச்செடி
தம்பவகவேர் – விலாமிச்சைவேர்
தயிலபாணிகம் – வெண்சந்தனம்
தயிலபீதம் – அத்திப்பிசின்
தரகம்புல் – வாசனைப்புல்
தாக்கதிமரம் – அத்திமரம்
தராகதம்பமரம் – கடம்பமரம்
தராசதமரம் – கொடுக்காப்புளிமரம்
தராசிகக்கொடி – பெருமருந்துக்கொடி
தராசிதாப்பழம் – கொட்டாஞ்சிப்பழம்
தராசுச்செடி – வெள்ளெருக்குச்செடி
தராயிலைச்செடி – திராயிலைச்செடி
தராய்ப்பூண்டு – கச்சந்திராய்ப்பூண்டு
தரிசவச்செடி – சந்திரகாந்தச்செடி
தருணகமாதிச்செடி – ஆமணக்குச்செடி
தருணகாதித்தச்செடி – குறண்டிச்செடி
தருணசீரம் – பெருஞ்சீரகம்
தருணசேபிகக்கொடி – குறட்டைக்கொடி
தருணிகம் – கற்றாழை
தருணிச்செடி – தகரைச்செடி
தருப்பூசணி – தற்பூசணிக்கொடி
தருப்பூசைத்தென்னை – கெவுளிபாத்திரத்தென்னை
தருப்பைப்புல் – தர்ப்பைப்புல்
தருமசந்தகிமரம் – ஆயிரங்காட்சித்தென்னை
தருவிராகமரம் – பனைமரம்
தருவிராகிகமரம் – குளோப்புக்கொன்னைமரம்
தரைப்பசலி – படர்பசலிக்கொடி
தரைப்பசைன்செடி – நிலப்பனைச்செடி
தர்ப்பூஸ்பழம் – இரத்தபூஸ்பழம்
தர்மகாலினிமரம் – சாயாவிருட்சம்
தலைசுருளிக்கொடி – பெருமருந்துக்கொடி
தலைசூடிமரம் – கொன்றைமரம்
தலைசூடுவள்ளிக்கொடி – தலைசுருளிக்கொடி
தலைச்சன் – முதற்பிள்ளை
தலைச்சுருள் வள்ளி – கருடக்கொடி
தலைச்சுழல் மூலி – கஞ்சாங்கோரை
தலைத்தாதுக்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
தலைத்தூகமரம் – இரும்பகமரம்
தலைநிம்பகிச்செடி – நிலவேம்புச்செடி
தலைநிம்பம் – சிவனார்வேம்புச்செடி
தலைபோடுகம் – பொடுதலை




