HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3601 - 3650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3601 – 3650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3601 – 3650 மூலிகைச் சரக்குகள்

கனங்காசிகச்செடி – சிவப்பு அந்திமல்லிகைச்செடி
கனங்காதிகச்செடி – சுவற்று முள்ளங்கிச்செடி
கனசமிளகு – வால்மிளகு
கனசரம் – சூதம்
கனலிச்செடி – கொடுவேலிச்செடி
கனல்மரம் – சோதிமரம்
கனல்மூங்கில் – விஷமூங்கில்
கனவுதிரவிருட்சம் – உதிரவேங்கை விருட்சம்
கனையெருமைவிருட்சம் – எருமைகனைச்சான் மரம்
கனைவலங்கள்ளி – ஐங்கணைக்கள்ளி
கன்மதம் – கல்மதம்
கன்மதார்மரம் – சூலிமரம்
கன்மலிச்செடி – ஏலச்செடி
கன்மாரகிமரம் – ஈரப்பலாமரம்
கன்னக்கீரை – சிறுகீரை
கன்னற்கட்டி – வெல்லம்
கன்னற்றட்டை – கரும்பு தட்டை
கன்னாதயச்செடி – கசகசாச்செடி
கன்னி – குமரிக்கற்றாழை
கன்னிகச்செடி – மணத்தக்காளிச்செடி
கன்னிகச்சோலம் – கச்சோலம்
கன்னிகார்மரம் – கோங்குமரம்
கன்னிக்கிழங்கு – சின்னிக்கிழங்கு
கன்னிக்கொடி – காக்கணத்திக்கொடி
கன்னிசாக்கிழங்கு – வெருகன்கிழங்கு
கன்னிநீர் – கற்றாழைநீர்
கன்னிநீலம் – கடற்றாமரை
கன்னிப்பால் – அமுதப்பால்
கன்னிமரம் – வாழைமரம்
கன்னியன்னம் – கற்றாழைச்சோற
கன்னியாகியம் – சிறுநீர்
கன்னியாகுமரிநீர் – பிரவிடைநீர்
கன்னியூசரிச்செடி – சீமையாமணக்குச்செடி
கன்னிறச்செடி – சங்கஞ்செடி
கன்னுச்செடி – பருத்திச்செடி
கன்னுறுக்கீரை – சிறுகீரை
கன்னோக்கியச்செடி – கதிர்ப்பச்சைச்செடி
கன்னோங்கமரம் – சீமைவிளாமரம்
கன்னோசிகமரம் – செம்மொச்சிமரம்
கன்னோப்பியச்செடி – சீhகாகோளிச்செடி
கன்னோமியகாயம் – சீமைவெங்காயம்
காகதுண்டமரம் – அகில்மரம்
காகதும்பிமரம் – கருந்தும்பிமரம்
காகதூண்டி – காக்கைப்பொன்
காகத்தாரிக்கிழங்கு – இரேவல்சின்னிக்கிழங்கு
காகத்திருப்பி – திப்பிலி
காகத்தீருகச்செடி – காட்டுப்புகையிலைச்செடி
காகத்துரத்திக்கொடி – காத்தொட்டிக்கொடி
காகநாசமரம் – அனிச்சமரம்
காகநாசிக்கொடி – பாற்சொற்றிக்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments