சித்த வைத்திய அகராதி 3651 – 3700 மூலிகைச் சரக்குகள்
காகநாபிக்கிழங்கு – கருநாவிக்கிழங்கு
காகநிமிளை – காக்கைப்பொன்
காகநேமிமரம் – கருங்குங்கிலியம்
காகிமசாரிச்செடி – குறிஞ்சாச்செடி
காகிமமரம் – விளாமரம்
காகுராசிக்காய் – புடலங்காய்
காகுராசிக்கொடி – புடோற்கொடி
காகோடரிசி – வாலுளுவையரிசி
காகோடாகமரம் – காட்டு முருங்கைமரம்
கரகோடிமரம் – எட்டிமரம்
காகோதரச்செடி – துளசிச்செடி
காகோளிகாச்செடி – தேட்கொடுக்ககுச்செடி
காகோளிச்சிறுமி – சீரகாகோளிச்செடி
காகோளி விரை – தேட்கொடுக்கு விரை
காகோறினிமரம் – அசோகுமரம்
காகோனியசீரம் – கருஞ்சீரகம்
காக்கட்டான் – காக்கணத்திக்கொடி
காக்கணக்கிரியக்கொடி – காட்டுச்சுரைக்கொடி
காக்கணத்தி – காக்கட்டான்கொடி
காக்கலாதிதம் – காளான்
காக்கிலைக்கொடி – குறட்டைக்கொடி
காக்களிச்செடி – தேட் கொடுக்க
காக்காய்ச்சிப்பி – ஏரிப்பிண்டம்
காக்குறட்டைக்கொடி – கருங்காக்கணத்திக்கொடி
காக்கைகரிச்கான்செடி – ஈயத்தண்டுச்செடி
காக்கைகொல்லிவிதை – காக்காவல்லிவிதை
காக்கைமல்லிமரம் – நுணாமரம்
காசாளி – ஆற்றாளிச்செடி
காசாகிதக்கீரை – அரைக்கீரை
காசாப்புல் – நாணற்புல்
காசாமரம் – காயாமரம்
காசிசக்கொடி – ஆடுதின்னாப்பாளைக் கொடி
காசிகாவகத்தி – கீரையகத்தி
காசிசீரம் – சிறுசீரகம்
காசிதாக்கியப்புடல் – கொம்புப்புடற்கொடி
காசித்தும்பைச்செடி – புண்ணியத்தும்பைச்செடி
காசிப்பலிகக்கொடி – கேந்திர வல்லிக்கொடி
காசிப்பன்னீர்மரம் – தேவபன்னீர்மரம்
காசிமகாமரம் – கருவாகைமரம்
காசியரளி – தங்காளி
காசிரத்தக்கொடி – வாற்சுண்டிக்கொடி
காசினிக்கீரை – அரைக்கீரை
காசுகாதிமல்லி – கொத்தமல்லி
காசுக்கட்டி – பற்காவிக்கட்டி
காசுலவவுப்பு – வளையலுப்பு
காசைச்செடி – காயாங்குலைச்செடி
காச்சகற்கீரை – முன்னைக்கீரை
காச்சிகச்செடி – துவரைச்செடி
காச்சிரக்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
காச்சுரக்கீரை – புளிச்சக்கீரை




